தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான சூர்யாவிற்கு, கடந்த 7-ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு, நடிகர் சூர்யா தன்னைத் தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை எடுத்து வந்தார். சில நாட்கள் மருத்துவமனையில்இருந்த சூர்யா, கடந்த 11-ஆம் தேதி முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய பின்னும் சில நாட்கள் அவர் தன்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்தார். இந்த நிலையில், அவர் மீண்டும் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில், அவருக்குக் கரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.