சூர்யாநடித்து, தயாரித்துள்ள படம் 'சூரரைப்போற்று'. இப்படத்தை சுதாகொங்கராஇயக்கியுள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம்இன்று நள்ளிரவில்வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின்இறுதிக்கட்ட ப்ரோமோஷன்பணிகள்முழுவேகத்தில் நடந்து வருகின்றன.
சமீபத்தில்நடிகர்சூர்யா தனது ரசிகர்களிடம், சூரரைப் போற்று படத்தின்இணையதளத்தில் தங்களதுகையெழுத்தைபகிருமாறும், ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் கூறிருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள்தங்களதுகையெழுத்தை,அந்த இணையதளத்தில் பகிர்ந்தனர். இந்தநிலையில், கூறியவாறே ரசிகர்களுக்குஇன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார் சூர்யா.
சூரரைப் போற்று இணையதளத்தில் பகிரப்பட்ட கையெழுத்துகள்,ஸ்பேஸ்பலூன்மூலம் வானின்உயரமான இடத்திற்குப் பறக்கவிடப்பட்டுள்ளது. ஜெர்மனிகுழுஒன்று இதனைச் செய்துள்ளது. ரசிகர்களின்கையெழுத்துகள்பறக்கவிடப்பட்டதை, சூர்யாதனதுட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகவெளியிட்டு, ரசிகர்களுக்குச் சமர்ப்பணம் எனக் கூறியுள்ளார்.மேலும்,அந்த வீடியோவில் தோன்றும் சூர்யா, "எனதுநல விரும்பிகளும், ரசிகர்களும் மிகப் பெரிய உயரத்தை எட்ட வேண்டும், பெரிய கனவுகளைக் காண வேண்டும், எப்போதும்நேர்மறையாகஇருக்கவேண்டும்எனவிரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.