Advertisment

அடுத்தடுத்த அங்கீகாரம்... ஆஸ்கர் விருது பட்டியலில் 'ஜெய் பீம்' 

suriya starring  jai bhim nominated best feature film oscars 2021

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினாலும் சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் 'ஜெய் பீம்' படத்திற்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisment

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதிபட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் உலகளவில் 276 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான 'மரைக்காயர்' ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில்இறுதிப்பட்டியல் வரை சென்றதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

94TH OSCARS AWARDS actor surya jai bhim
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe