Advertisment

பெண்களுக்கு எது சொர்க்கம்? - சூர்யா கொடுத்த விளக்கம் 

Suriya

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படக்குழுவினரின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

Advertisment

நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், “கரோனா லாக்டவுன் சமயத்தில்தான் இந்தப் படம் நடந்தது. தேனி மாவட்டத்தில் ஷூட்டிங் அனுமதி வாங்குவதில் நிறைய சிரமம் இருந்தது. படத்தில் கேமராவுக்கு பின்னிருந்து உழைத்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

Advertisment

தனியாக நாம் ஜெயிக்க முடியாது. குடும்பத்தில் உள்ளவர்கள் செய்யும் தியாகங்களால்தான் நாங்கள் வெளியே வந்து வேலை செய்ய முடிகிறது. என் அம்மா தொடங்கி மனைவி, மகள் பல விஷயங்களை தியாகம் செய்வதால்தான் நான் மேலே உயர்கிறேன். அதனால் இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவரது குடும்பத்தையும் அழைத்து இந்த நிகழ்வை நடத்த விரும்பினோம். நாங்கள் சாப்பிட்ட தட்டை வேறொருவர் கழுவினால் எங்களுக்கு அதுதான் சொர்க்கம் என்று என்னுடைய தங்கை ஒருமுறை கூறினார். அதனால் பெண்களுக்கு எப்போதும் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை முன்னிறுத்தி நம்முடைய வாழ்க்கையை பார்த்தால் நம் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe