Advertisment

“கல்வி என்பது வெறும் அறிவு மட்டும் கிடையாது” - சூர்யா

169

சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு பிரம்மாண்ட விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். மேலும் கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

Advertisment

மேடையில் சூர்யா பேசுகையில், “கல்வி என்பது வெறும் அறிவு மட்டும் கிடையாது. அன்பு நிறைந்த ஒரு செயலாகவும் பார்க்கிறேன். தகுதியான முதல் தலைமுறையச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரிக்கு போய் பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக நிறைய கல்லூரிகள், நன்கொடையாளர்கள், நிறுவனங்கள், தன்னாலர்வர்கள் நமக்கு உதவி செஞ்சிருக்காங்க. மாசம் 300 ரூபாய்ன்னு முகம் தெரியாத நபர்கள் அகரம் மாணவ மாணவிகள் படுக்கனும்னு ரொம்ப நம்பிக்கையா உதவியிருக்காங்க. அவங்களுடைய நம்பிக்கையை அகரம் மாணவ மாணவிகள் காப்பாத்திருக்காங்க. அவங்களுடைய குடும்பத்தையும் அவங்க காப்பாத்திருக்காங்க. அது பெருமையை கொடுத்திருக்குமான்னா தெரியல, ஆனால், 22 வயசுல தங்களை போலே நிறைய குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக அகரமில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் மீண்டும் தன்னார்வலராக சேர்ந்திருக்காங்க.     

Advertisment

2006ல் அகரம் ஆரம்பிக்கறப்போ இன்னமும் முதல் தலைமுறை படிக்கும் மாணவர்கள் இருக்குறாங்களான்னு கேள்வி கேட்டேன். அது தான் அகரம் ஆரம்பிக்க முதல் காரணம். அதே போல இப்போதும் இருக்காங்க. அடுத்த வருஷமும் இருப்பாங்க. அவங்களுக்கு எல்லாமே இருக்கும். ஆனால் பணம் தடையாக இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு அகரமில் படித்தவர்கள் நிச்சயம் படிக்க வைப்பாங்க. அவங்களிடம் தாழ்மையுடன் கேட்கிறேன், உங்களின் உதவி வேண்டும். கல்வி, மிகப் பெரிய சக்தி வாய்ந்த ஆயுதம். அகரம் குடும்பத்தில் நானும் இருப்பது  மிகப் பெரிய சந்தோஷம்” என்றார். 

agaram actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe