Advertisment

ஒரே நாளினைக் குறிவைக்கும் சூர்யா, சிவகார்த்திகேயன்!

surya

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'சூரரைப் போற்று'. கரோனா நெருக்கடி காரணமாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிக்க உள்ள படம் 'சூர்யா 40'. இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருக்கும் இப்படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. முழுவீச்சில் நடைபெற்று வரும் படத்தின் முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தினை விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6804bb7a-3ad8-407b-904d-eb825492dc3d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_47.jpg" />

Advertisment

தமிழ் சினிமாவின் மற்றுமொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள 'டாக்டர்' படம் மார்ச் மாதம் ரிலீசாக உள்ளது. அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த 'அயலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய இருப்பதால் அப்பணிகள் நிறைவடைய இந்தாண்டு இறுதிவரை காலம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் இயக்கும் ‘டான்’ படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இந்த நிலையில், இப்படத்தினை விநாயர் சதுர்த்தி தினத்தன்று திரைக்கு கொண்டுவர லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

alt="trip" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e01a4af8-c740-4211-99bb-78b55e44ce82" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip_13.jpg" />

சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் விநாயகர் சதுர்த்தி தினத்தைக் குறிவைத்துள்ளதால், இவ்வருட விநாயகர் சதுர்த்தி இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டத்தினமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor sivakarthikeyan actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe