nfjdfdn

தமிழ்நாட்டில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் நேற்று முன்தினம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு பல்வேறு பிரபலங்கள் நன்றி தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் சூர்யா இந்த மசோதாவுக்கு நன்றி தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்..." என கூறியுள்ளார்.