suriya retro movie release update

சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடந்தது. இதில் ஊட்டியில் நடந்த படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு அவர் குணமாகி அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து முன்னதாக கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகியிருந்தது. அதையடுத்து கடந்த மாதம் டைட்டில் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியாகும் என அறிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதே தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. கங்குவா படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் இப்படத்தை சூர்யாவின் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.