Advertisment

‘வண்டார் கொடி... வண்ணக்கிளி’ - வேதனையுடன் நடனமாடும் ‘ரெட்ரோ’ சூர்யா

suriya retro first single released

Advertisment

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடந்தது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டது படக்குழு. பின்பு அதே ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகியிருந்தது. அதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டைட்டில் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் பாடல் உரிமையை பிரபல நிறுவனமான டீ - சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் மே 1ஆம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் டைட்டில் டீசர் வெளியானது.

இதனைத் தொடர்ந்து படக்குழு மேக்கிங் வீடியோவை காமிக்ஸ் வடிவத்தில் வெளியிடத் திட்டமிட்டதன் பேரில் முதலில் ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ வீடியோவின் காமிக்ஸ் வடிவத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சிறையில் இருக்கும் சூர்யா தன் காதலியை நினைத்துப் பாடுவது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது. அதற்கேற்றார் போல் ‘வண்டாட் கொடி, என் வண்ணக்கிளி... என் உள்ளால உன்னால காயம்’, ‘வழி கண்டேனடி உயிர் கொண்டேனடி என் அன்பான கூடு நீயும்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இந்த லிரிக் வீடியோவில் காதலியை நினைத்து சோகத்தில் இருக்கும் சூர்யா, நடுவில் வேதனையுடன் நடனமாடவும் செய்கிறார். இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியிருக்க விவேக் எழுதியுள்ளார். ஷெரிஃப் நடனம் அமைத்துள்ளார்.

Advertisment

Retro santhosh narayanan karthik subbaraj actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe