Advertisment

“கல்வியே நமது சமூகப் பாதுகாப்பு” - சூர்யா

suriya release book about school education and structure

சூர்யா திரைப்படங்களை தவிர்த்து அகரம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட பல உதவிகள் செய்து வருகிறார். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக வெளியிடும் 'வகுப்பறை உலகம்' என்ற புத்தகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “யாதும் இதழில் 'வகுப்பறை உலகம்' தொடராக வெளிவந்து தற்போது நூல் வடிவம் பெறுகிறது. அகரத்தின் வெளியீடாக வரும் இந்த நூல் கல்வியின் அடிப்படையையும் பிற நாடுகளின் கல்வியமைப்பையும் புரிந்து கொள்ள உதவும். உலகின் 29 நாடுகளில் வகுப்பறைகள் எப்படியுள்ளன என்பதைப் படம் பிடித்துக் காட்டும் ஓர் ஆவணம். இந்த நூலை எழுதியுள்ள விஜயபாஸ்கர் விஜய்க்கும், இதை நூலாகத் தொகுத்து வெளியிடும் தரு மீடியா குழுவினருக்கும், கல்வியின் வாயிலாகச் சமூக மாற்றத்தில் பங்கெடுத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும். கல்வியே நமது சமூகப் பாதுகாப்பு” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தை கைவசம் வைத்துள்ளார்.

agaram actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe