Advertisment

மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் சூர்யா - வெளியான மாஸ் தகவல்

suriya ready to act viilain in '24' movie 2nd part ?

சூர்யா, 'விக்ரம்' படத்தை தொடர்ந்து தற்போது பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். 2டி நிறுவனம் சார்பாக சூர்யா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். பின்பு சிறுத்தை சிவா இயக்கத்திலும் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் சூர்யாவை வைத்து '24' படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் '24' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாகவும் முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

actor suriya vikram kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe