“Suriya Quits Vanangan; This is my decision as a brother” - Director Bala

Advertisment

'எதற்கும் துணிந்தவன்' படத்தைத்தொடர்ந்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' நடித்து வந்தார். இப்படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க, சூர்யாவின் தங்கை கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமீதா பைஜூ நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

பாலாவின் பிறந்தநாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் இப்படத்திற்கு வணங்கான் எனப் பெயரிடப்பட்டது. இந்நிலையில் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால்இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisment

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்குஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும்அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

'நந்தா'வில் நான் பார்த்த சூர்யா, 'பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்..” எனக் கூறியுள்ளார்.