/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/276_13.jpg)
மலையாளத்தில் மம்மூட்டி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காதல் - தி கோர்'. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 23ஆம் தேதி இப்படம் வெளியானது. நல்ல வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது.
இப்படத்தை தற்போது பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். சமந்தா, “இந்த ஆண்டின் சிறந்த படம்” என குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டினார். இந்த நிலையில், சூர்யா, “அழகான மனங்கள் ஒன்றிணைந்தால், இது போன்ற திரைப்படங்கள் கிடைக்கும். என்ன ஒரு முற்போக்கான படம். படக்குழுவுக்கு ஹாட்ஸ் ஆஃப். சினிமா மீது காதல் கொண்டுள்ளவர் மம்மூட்டி. இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கிறார். ஜியோ பேபியின் அமைதியான காட்சிகள் கூட பெரிய அளவில் பேசுகின்றன.
எழுத்தாளர்கள் ஆதர்ஷ் சுகுமாறன், பால்சன் இந்த உலகை நமக்கு காட்டியதற்காக வாழ்த்துகள். மேலும் என் ஓமனா ஜோதிகா, காதல் என்னவாக இருக்கும் என்பதைக் காட்டி அனைத்து இதயங்களையும் வென்றுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)