Skip to main content

தென் இந்திய சினிமாவின் சிறந்த பிரபலமாக சூர்யா தேர்வு

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

 Suriya is the No. 1 celebrity amongst cine-stars from the South of India.

 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் பிராண்ட்ஸ் நடத்திய ஆய்வின்படி, தென்னிந்தியாவின் சினிமா நட்சத்திரங்களில் சூர்யா நம்பர் 1 பிரபலமாக உள்ளார். அவர் தென் இந்தியாவில்  உள்ள மற்ற நடிகர்களை விட மிகவும் நம்பகமானவராகவும், மிகவும் அடையாளம் காணப்பட்டவராகவும், மிகவும் கவர்ச்சிகரமானவராகவும், மிகவும் மரியாதைக்குரியவராகவும், மிகவும் ஈர்க்கக்கூடியவராகவும் இருக்கிறார் என அந்நிறுவனம் சூர்யாவைப் பெருமைப்படுத்திச் சிறப்பித்திருக்கிறது

 

நான்கு மாநிலங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் போது அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டா டோலிவுட்டில் முன்னணியில் இருந்தனர்.  விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் முன்னணியில் இருந்தனர்.  ஃபஹத் பாசில் மற்றும் கிச்சா சுதீப் மாலிவுட் மற்றும் சாண்டல்வுட்டில் முன்னணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அசைவம் ஊட்டி விடுவாரு” - கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Surya tribute to Vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”

“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். 

Next Story

‘ஜெய்பீம்’ அங்கீகாரம் சிலிர்ப்பூட்டுகிறது; முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 The 'Jaibhim' recognition Thanks Surya

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர். சர்வதேச அரங்கில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள இப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்று பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகர் சூர்யா தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள் எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடையச் செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.” என்று பதிவிட்டுள்ளார்.