Advertisment

‘பயணம் பயணம் தொடருடா...' - மீண்டும் கைகோர்க்கிறது 'சூரரைப் போற்று' கூட்டணி

suriya next with sudha kongara

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா, இயக்கும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி. அவர் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருட தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. அங்கு படத்தில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Advertisment

'கங்குவா' படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் வாடிவாசல் படத்திற்கு முன்பாக மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பி.ஆர்.ஓடைமண்ட் பாபு ஒரு பதிவை அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகத்தெரிவித்துள்ளார். மேலும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு சார்பில் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் மூவரின் கூட்டணியில் முதல் படமாக வெளியான 'சூரரைப் போற்று' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு இப்படம் 68வது தேசிய விருது விழாவில் 5 விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

suriya 43 actor suriya sudha kongara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe