suriya

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 40' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்க உள்ள படம் 'வாடிவாசல்'. சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.

இந்த நிலையில், சூர்யா நடிக்க இருக்கும் அடுத்தப் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வசந்தபாலன் சமீபத்தில் சூர்யாவை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும், அக்கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துப் போக, அதில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இக்கதை வரலாற்று பின்னணி கொண்ட கதை என்றும் கூறப்படுகிறது. ‘சூர்யா 40’, ‘வாடிவாசல்’ படங்களை நிறைவு செய்த பின், வசந்தபாலன் கூறிய கதையில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.