arya

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் விமர்சன ரீதியாக பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் கதை குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தியை பா.ரஞ்சித் முதலில் அணுகியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கதை கார்த்திக்கு பிடிக்காமல்போக, அதன் பிறகு பா.ரஞ்சித் - கார்த்தி கூட்டணியில் மெட்ராஸ் திரைப்படம் உருவானது. பின், 'கபாலி', 'காலா' ஆகிய படங்களுக்குப் பிறகு 'சார்பட்டா பரம்பரை' படத்தின் கதையை நடிகர் சூர்யாவிடம் பா.ரஞ்சித் கூறியதாகக் கூறப்படுகிறது. 'கபாலி' மற்றும் 'காலா' படங்களுக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனம் மற்றும் இவ்விரு படங்கள் வணிக ரீதியாக சந்தித்த பின்னடைவு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு இந்தக் கதையில் நடிக்க சூர்யா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகே, இக்கதையை நடிகர் ஆர்யாவிடம் பா.ரஞ்சித் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

Advertisment