Advertisment

புகைப்படத்துடன் வெளியான கங்குவா பட அப்டேட்

suriya kanguva update

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் கடந்த நவம்பரில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்பு ஓய்விற்காக வெளிநாடு சென்று கடந்த மாதம் சென்னை வந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Advertisment

இதனைத்தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டனர். இந்த நிலையில் சூர்யா டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

actor suriya Kanguva
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe