Advertisment

‘விருந்து அருந்த வாரீரோ...’; ஆக்ரோஷத்துடன் சூர்யா

suriya kanguva trailer released

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் க்ளிம்ஸ் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீஸர் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியானது. இவ்விரு வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் பாடலான ‘ஃபயர் சாங்...’ வெளியாகி கவனம் பெற்றது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் எத்தனையோ மர்மங்கள் கொட்டி கிடக்கிறது என்று ஒரு பெண்ணின் பிண்ணனி குரலில் ஆரம்பித்து, பிறகு பாபி தியோல் விருந்து அருந்த வாரீரோ? எனத் தொடர்கிறது. அதன் பின்பு எமோஷ்னல், கோபம், இரக்கமற்ற பலிவாங்குதல், எனத் தலைப்புகளை அடுக்கி அதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு காட்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும் “அறுபட்டு என் சிரம் மண் உருண்டாலும் உருளும். உன் நெற்றியும், முழங்காலும் மண் தொடா...மண்டியிடா...” என்று ஆக்ரோசத்துடன் கூட்டத்தின் தலைவனாக சூர்யா பேசுகிறார். இதற்கு ஈடு செய்யும் விதமாக தேவி ஸ்ரீபிரசாத் இசை பின்னணியில் ‘தலைவனே... தலைவனே...’என்று ஒலிக்கிறது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

actor suriya Kanguva siruthai siva
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe