suriya kanguva and his 44th film update

தமிழ் சினிமாவில் தனது அயராத உழைப்பால் தேர்ந்த நடிகராகவும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வபோது தனது கருத்தை வெளிப்படையாக முன்வைத்து தனித்துவம் வாய்ந்த நபராக இருக்கிறார். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்து வரும் கங்குவா படக்குழு, சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படத்தின் முதல் பாடலான ‘ஃபயர்’ பாடலை வெளியிட்டது. இப்பாடலை வி.எம்.மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் பாடியிருக்க விவேகா வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் இன்னும் பெயரிடாத படத்தில், வாழ்த்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் புது கெட்டப்பில் சூர்யா இடம்பெற்றுள்ளார். மேலும் படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை, சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதையடுத்து இப்படத்தில் பூஜா ஹெக்டே சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கின்றார். மேலும், இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், சுஜித் ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.