/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/139_35.jpg)
சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் தியா தற்போது ஆவணக் குறும்படம் எடுத்ததற்காக விருது வாங்கியுள்ளார். இதனை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பெருமை கொண்டுள்ளார்.
அவர் பகிர்ந்த பதிவில், “சினிமா துறையில் ஒளிப்பதிவு தொடர்பான வேலைகளில் பெண்களுக்கு நடக்கும் பாகுபாடுகளை ஒரு மாணவியாக இருந்து ஆவணப்படமாக்கிதற்கு பெருமை கொள்கிறேன் தியா. இது போல தொடர்ந்து செயல்படு. வெளியுலகத்திற்கு தெரியாத இது போன்ற பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காண்பித்ததற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ஆவணக் குறும்படத்தின் யூட்யூப் லிங்கையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு கீழ் தியா நன்று தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார்.
தியா இயக்கியுள்ள இந்த ஆவணக்குறும்படம் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதையும் சிறந்த மாணவ குறும்படம் என்ற விருதையும் அவருக்கு பெற்று தந்துள்ளது. இந்த குறும்படத்தில் பாலிவுட் துறையில் காஃபர்-ஆக(Gaffer)இருக்கும் மூன்று பெண்கள் தங்களது பணியில் இருக்கும் சிரமத்தை விவரிக்கின்றனர். இந்த படதிற்காக விருது வென்ற தியாவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)