இணையத்தில் வைரலாகும் சூர்யா ஜோதிகா புகைப்படம்

Suriya Jyothika's photo is going viral on the internet

சூர்யா தற்போது பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளன்று சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை 'வாடிவாசல்' படக்குழு வெளியிட்டது. அதோடு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

இந்நிலையில் சூர்யா, தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் சூர்யா ரசிகர்கள் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

actor suriya
இதையும் படியுங்கள்
Subscribe