Advertisment

கரோனா தொற்றுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சூர்யா! வைரலாகும் ஃபோட்டோ!

iihihi

'சூரரைப் போற்று' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, 'சூர்யா 40' எனதற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

Advertisment

சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள நடிகர் சூர்யா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால் சூர்யா இல்லாத காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது. இந்த நிலையில், 'சூர்யா 40' படக்குழுவினரோடு நடிகர் சூர்யா தற்போது இணைந்துள்ளார். கரோனா தொற்றுக்குப் பிறகு தனிமைபடுத்திக்கொண்ட அவர், தற்போது முழுமையாக குணமடைந்ததால் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா தனது சமூகவலைதளத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

suriya40 actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe