Advertisment

உயிரிழந்த 2 ரசிகர்கள் - சூர்யா ஆறுதல்

 Suriya has consoled through video call to his 2 fans passed away

Advertisment

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ளது. சூர்யாவிற்குத் தமிழ்நாட்டைத் தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா எனத் தென்னிந்திய மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவரது பிறந்தநாளான நேற்று அவரது ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.மேலும் அவர்களுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இறந்துள்ளார். இவர் தீவிர சூர்யா ரசிகர் எனத் தெரிய வந்துள்ளதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு தொலைப்பேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தைச் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

fans actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe