Advertisment

68 வது தேசிய விருது விழா; சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் சூர்யா

suriya got national award for soorarai potru

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இதில் விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் நடிகர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி வருகிறார்.

Advertisment

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். அப்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அரங்கத்திற்கு கீழே அமர்ந்திருந்த சூர்யாவின் மனைவி ஜோதிகா கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Advertisment

soorarai potru actor suriya national award
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe