Advertisment

மக்களின் கோரிக்கை - பரிசளித்த சூர்யா

suriya gifted vehicle to the Kannathur Reddykuppam Panchayat Union people

Advertisment

நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ’சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனிடையே பாலா இயக்கும் 'வணங்கான்' படத்திலும் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்திலும் நடிக்கிறார்.

இதனிடையே '2டி என்டெர்டெய்ன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 'வணங்கான்' படத்தையும் சுதா கொங்கரா இயக்கும் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்றை பரிசாக அளித்துள்ளது. இதனை சூர்யாவின் தந்தை சிவகுமார் அப்பகுதி பஞ்சாயத்து தலைவரிடம் வழங்கினார். முன்னதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியத்துக்கு குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றும் வாகனம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

சிவகுமார் வாகனத்தை பரிசாக வழங்கியபோது '2டி என்டெர்டெய்ன்மெண்ட்' நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை சூர்யா ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

actor sivakumar actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe