சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு பிரம்மாண்ட விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் நடைபெற்றது. இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். மேலும் கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேடையில் அகரம் அறக்கட்டளையின் மூலம் படித்து, இன்று நல்ல நிலையில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகள் தங்களது கடந்த கால வாழ்க்கையை பகிர்ந்திருந்தனர். அப்போது பேசிய ஒரு மாணவி, “நான் ஜெயபிரியா, கடலூர் மாவட்டத்தில் இருந்து வரேன். அகரமில் நான் 2014 பேட்ச். இப்போ நான் அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். இந்தியாவோட பிரபலமான நிறுவனம் இன்போசிஸ்-ல டெக்னாலஜி லீடா ஒர்க் பன்னிட்டு இருக்கேன். என்னுடைய ஊரு சொம்ப சின்னது. ஆனா அந்த ஊர் பேரு அகரம். அங்க ஒரு குடிகார அப்பா, அத எதுவுமே செய்ய முடியாத அம்மா. அவங்களுக்கு ரெண்டு பொண்ணு. வீட சுத்தி மரம், செடி, கொடியெல்லாம் இருக்கும். மழை பெய்ஞ்சா பாம்பு, பல்லி எல்லாம் அடிக்கடி வந்துட்டு போகும். எங்க வீட்டுக்கு கரண்ட் இருந்ததில்ல. தண்ணி வந்ததில்ல. ஆனா எனக்கு படிக்க ரொம்ப புடிக்கும்.
ஒரு கட்டத்துல வீட எங்ககிட்ட இருந்து பிடுங்கிட்டாங்க. வீடே இல்லாம இருந்தோம். அதுக்கப்புறம் நான் 12த் முடிச்சேன். 195 கட் ஆஃப் எடுத்து ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்தேன். ஆனா அதுக்கப்புறம் என்ன பன்றதுன்னு தெரியல. அப்போ எனக்கு அகரம் பத்தி தெரியாது. என் ஹெட்மாஸ்டர்ஸ் வந்து ஒரு ஃபோன் நம்பர் கொடுத்தாங்க. அந்த நம்பருக்கு ஃபோன் பண்ண பிறகு என் வாழ்க்கையே மாறிடுச்சு. காலேஜ் சேர்ந்தேன். இங்கிலீஷில் படிக்க கஷ்டமா இருந்துச்சு. திருப்பியும் அகரம் கிட்ட ஹெல்ப் கேட்டேன். அவங்க சேர்த்துவிட்டவுடனே அப்படியே போக மாட்டாங்க. கடைசி வரை நிப்பாங்க. அதுக்கப்புறம் நான் கோல்ட் மெடடிஸ்ட் ஆனேன். அப்புறம் வேலைக்கு போனேன். எல்லாரும் தமிழ் மீடியமான்னு ஆச்சரியப்படுவாங்க. எனக்கு இருக்கிற ஒரே லட்சியம், எங்க அப்பா அம்மா நிம்மதியா தூங்க ஒரு வீடு கட்டணும். அதுவும் இப்போ நினைவாகிடுச்சு. பெரிய வீடு கட்டிவிட்டேன். 10 வருஷத்துக்கு அப்புறம் அகரம் கொடுத்த கல்வியால என் வீட்ட மீட்டு எடுத்தேன். பொம்பள பிள்ளைய ஏன் படிக்க வைக்கிறன்னு எல்லாரும் சொல்வாங்க. அவங்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்குறேன், பொம்பள பிள்ள படிக்கட்டும்” என்றார். இதை கேட்டுக் கொண்ட சூர்யா மிகவும் எமோஷ்னலாக கண்கலங்கியபடியே காணப்பட்டார். பின்பு எழுந்து நின்று கைதட்டினார்” என்றார்.