suriya family members meet ilaiyaraaja regards his symphony concert

இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இசைஞானி இளையராஜா, 35 நாட்களில் தான் எழுதி முடித்த முழு சிம்பொனியை ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்​பொனியை எழு​தி, சர்வதேச அளவில் அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்​தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இளையராஜாவின் நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்பு அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் கௌரவம் அளிக்கப்பட்டது. அப்போது அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், இளையராஜா சாதனைகளைச் சொல்லி நாட்டிற்கே பெருமை சேர்த்ததாகப் பாராட்ட அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Advertisment

இந்த நிலையில் இளையராஜாவை சூர்யா, அவரது தந்தை சிவகுமார் மற்றும் சூர்யாவின் தங்கை பிரிந்தா ஆகியோர் நேரில் சந்தித்து சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக வாழ்த்து கூறினர். மேலும் தங்க செயினை பரிசாக அளித்தனர்.