"ஒருத்தரை ஒருத்தர் மனசை புரிஞ்சு வாழணும்" - ரசிகர் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா

Suriya congratulated the fans on their marriage

நடிகர் சூர்யா, பாலா இயக்கும் 'வணங்கான்' படத்திலும் சிறுத்தை சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் ‘அகரம்’ என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் பல ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவை ஏற்று உதவி செய்துள்ளார். மேலும் ரசிகர்களின் திருமண நிகழ்ச்சிக்கு நேரில் சென்றோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ சூர்யா வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது சூர்யா மணமக்களுக்கு தொலைப்பேசி வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சூர்யா வாழ்த்து தெரிவித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில், "ஒருத்தரைஒருத்தர் மனசைபுரிஞ்சு வாழணும். எப்பவேணாலும் எதுவேணாலும் பேசிக்கலாம்..., நான் ஒரு மாசம் ஊர்ல இல்ல. வந்துட்டு மீட் பண்ணலாம்" என குறிப்பிட்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா.

fans
இதையும் படியுங்கள்
Subscribe