Advertisment

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணி உறுதி; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Advertisment

suriya conforms his next with siruthai siva

சூர்யா தற்போது பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, “படப்பிடிப்பு தொடங்கியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் தேவை” என சூர்யா பதிவிட்டுள்ளார்.

actor suriya Devi Sri Prasad siruthai siva
இதையும் படியுங்கள்
Subscribe