Advertisment

அமெரிக்காவில் இறந்த ரசிகைக்கு சென்னையில் அஞ்சலி செலுத்திய சூர்யா

suriya condolences to his fan

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு உட்பட்ட டல்லாஸ் நகரில் அமைந்துள்ள பிரபலமான வணிக வளாகம் ஒன்றில் கடந்த 6 ஆம் தேதி திடீரென்று மர்ம நபர் ஒருவர், வணிக வளாகத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இறந்துள்ளார். இவர் தீவிர சூர்யா ரசிகர் எனத்தெரியவந்துள்ளது.

Advertisment

இந்த செய்தியை அறிந்த சூர்யா, ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும்ஐஸ்வர்யாவின் குடும்பத்தை தொலைப்பேசியில் அணுகி ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு அவர்களுக்கு ஆறுதல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், "ஈடு செய்ய முடியாத இந்த இழப்பு உண்மையில் என்னை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உங்கள் மகள் ஐஸ்வர்யாவை இழந்தது துரதிர்ஷ்டமானது.

Advertisment

ஒரு சக மனிதனாகவும் தந்தையாகவும் உங்கள் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் மகளை நினைவு கூறும் போதெல்லாம் என் கைகளைப் பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மகள் வானத்தில் பிரகாசமான நட்சத்திரமாக இருந்து நாம் அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe