டேனியல் பாலாஜி மறைவு குறித்து சூர்யா வேதனை பதிவு

suriya condolence post for daniel balaji passed away

காக்ககாக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம்மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களைத்தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதில் அதர்வா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜய் சேதுபதியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், டேனியல் பாலாஜி மறைவு குறித்து கூறுகையில், “டேனியல் பாலாஜி குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. ஒரு ஷாட் சரியாக வருவதற்கு கடுமையாக உழைப்பார். காக்க காக்கபடத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களின் இனிய நினைவுகள் இன்னும் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.

actor suriya condolence
இதையும் படியுங்கள்
Subscribe