suriya buys chennai teal in ispl

Advertisment

ஐபிஎல் தொடர் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்தவரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது அதே பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 மார்ச் 2ஆம் தேதி முதல்9ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது. இதில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீ நகர் என 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. மும்பை அணியை அமிதாப் பச்சன் வாங்கியிருந்தார். தொடர்ந்து பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம்சரணும் வாங்கி இருந்தனர். இந்த நிலையில் சென்னை அணியை சூர்யா வாங்கியுள்ளார்.