/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/236_14.jpg)
நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது வசதிக்கேற்ப தனி விமானங்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதன் மூலம் எந்த சிரமமுமின்றி தகுந்த நேரத்திற்குப் படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்குச் சென்று வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்தியாவில் சிரஞ்சீவி, ராம் சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சில நடிகர்கள் தனி விமானத்தை வைத்துள்ளனர். தமிழில் நயன்தாரா வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது டசால்ட் ஃபால்கன் 2000 (Dassault falcon 2000) என்ற சகல வசதிகளுடன் கூடிய தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் அந்த விமானம் ரூ.120 கோடி எனவும் கூறப்படுகிறது. ஆனால் இத்தகவலை சூர்யா தரப்பினர் மறுத்துள்ளனர். சூர்யா தற்போது எந்த தனி விமானத்தை வாங்கவில்லை என்றும் அத்தகவல் முற்றிலும் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/235_13.jpg)
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது குழந்தைகளை மும்பையில் படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)