"அவர் இனி இல்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்" - சூர்யா வேதனை!

gdgsdgsd

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களுக்கு பி.ஆர்.ஓவாக இருந்து வந்த பி.ஏ.ராஜு நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக பி.ஏ.ராஜு காலமானார். தெலுங்கு சினிமா பத்திரிகையாளராகவும், திரைப்படங்களின் புரமோஷன்களை கவனித்து வந்த இவர் விஷால் உள்பட ஒருசில தமிழ் நடிகர்களுக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தார். இவரது திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...

"நிபந்தனையற்ற ஒரு அன்பு எப்படி ஒரு தொழில்முறை உறவை தனிப்பட்ட உறவாக மாற்றும் என்பதை எங்களுக்குக் காட்டிய ஒருவர் நீங்கள்! பி.ஏ.ராஜு இனி இல்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்! அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்! உங்களது ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.

actor suriya
இதையும் படியுங்கள்
Subscribe