Suriya And Karthi At Spotted Madhurai Airport Viruman Audio Launch

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் இரண்டாவது முறையாக கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. முத்தையா இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனையொட்டி விருமன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று(3.8.2022) மாலை மதுரையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் படக்குழுவினருடன் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment