Advertisment

2023 ஆஸ்கர் விழா; ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து; சூர்யா பெருமிதம்

suriya and ar rahman congrats rrr and the elephant whisperer team

உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதானது சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.

Advertisment

இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கம் வாயிலாகப்படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில்ஏற்கனவே இரண்டு ஆஸ்கர் விருதை வென்றுள்ள ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஏ.ஆர். ரஹ்மான், "கீரவாணிக்கும் சந்திரபோஸுக்கும் வாழ்த்துகள். எதிர்பார்த்தது போல ஆஸ்கர் விருது தகுதியானவர்களுக்கு கிடைத்துள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், "கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு ஒரு புதிய வழியை வகுத்து உத்வேகமாகத்திகழ்கிறீர்கள். ஜெய் ஹோ" எனப் பதிவிட்டுள்ளார்.

சூர்யா, "ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்றது கீரவாணி சாரின் உழைப்புக்கான அங்கீகாரம். ராஜமௌலியின் விஷன் ஆஸ்கரில் ஜொலித்துள்ளது பெருமையாக உள்ளது. மேலும் இந்தியாவும் ஜொலிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், "கார்த்திகி கோன்சால்வ்ஸின் குழுவிற்கும் அவருக்கும் வாழ்த்துகள். உங்களது அயராதஉழைப்பிற்கு கிடைத்த தகுதியான விருது தான் ஆஸ்கர். இந்தியாவை கண்டு பெருமையடைகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, விஜய் தேவர கொண்டா உள்ளிட்ட பலர் 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

ar rahman actor suriya RRR 95th Oscars awards
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe