surya

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமடைந்த மீரா மிதுன், அண்மையில் நடிகர் சூர்யா மற்றும் விஜய் குறித்து தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அதற்கு அவர்களுடைய ரசிகர்களும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

Advertisment

இதனை தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு அவர் குறித்து விமர்சனங்கள் எழும்பொது, அதற்கு அவருடைய ரசிகர்களிடம் அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் வைத்திருந்த பதிவை தற்போது பகிர்ந்து அதனுடன், “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..” என்று தெரிவித்துள்ளார்.