விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் டீஸர் நேற்று மாலை வெளியானது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய அருண்குமார்தான் இந்த சிந்துபாத் படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவும் இந்த படத்தில் அறிமுகமாகிறார். டீஸரில் கூட விஜய் சேதுபதி, சூர்யாவை கழுத்தில் தூக்கி வைத்திருப்பது போன்ற ஒரு காட்சியும் வரும். ஏற்கனவே நானும் ரௌடிதான் என்ற படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக கொஞ்ச நொடிகளே வந்திருப்பார். இதை அடுத்து சிந்துபாத் படம் முழுவதுமாக நடித்திருக்கிறார் என்று படக்குழுவே தெரிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும், அவரது மகன் சூர்யாவும் திருடர்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி படத்தில் திருடனாக நடிக்கும் சூர்யா!
Advertisment