Advertisment

“அதிசயங்கள் நடக்கும் போது நல்ல சினிமா உருவாகும்” - சூர்யா 

suriya about Meiyazhagan movie response

96 படத்திற்கு பிறகு ச.பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மெய்யழகன்’. இப்படத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்சினி சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இப்படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படம் வெற்றி பெற தனுஷ், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து இப்படம் இன்று(27.09.2024) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்து லிங்குசாமி, விஷ்ணு விஷால், அல்போன்ஸ் புத்ரன், பாண்டிராஜ் உள்ளிட்டோர் படக்குழுவை பாராட்டினர்.

Advertisment

இந்த நிலையில் மெய்யழகன் படத்தின் வரவேற்பு குறித்து சூர்யா தற்போது நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவில், “பொதுவாக ஒரு திரைப்படம் அதிகமான காதலுடனும் கணக்குகளுடனும் எடுக்கப்படுகிறது. ஆனால் அதிசயங்கள்நடக்கும் போது நல்ல சினிமா உருவாகும். அதுபோல மெய்யழகன் படத்தில் நிறைய அதிசயங்கள்நடந்ததாக நான் நம்புகிறேன். இப்படத்திற்கு நீங்கள் கொடுத்த மகத்தான வரவேற்புக்கு நன்றி. இது எல்லாம் ஸ்கிரிப்ட் புத்தகத்திலிருந்துதான் தொடங்கியது. அதற்காக படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

actor karthi actor suriya Prem Kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe