ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனப் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ படம் சில காரணங்களால் தள்ளிப் போகிறது. 

Advertisment

இந்த நிலையில் சூர்யா அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவே தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் தயாரிக்கவுள்ளதாகவும் இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் சூர்யாவின் 47வது படமாக இப்படம் உருவாகும்.  

43

இயக்குநர் ஜித்து மாதவன், 2023ஆம் ஆண்டு சௌபின் சாஹிர், அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஹாரர் காமெடியில் வெளியாகி ஹிட்டடித்த ‘ரோமான்சம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். பின்பு கடந்த ஆண்டு ஃபகத் ஃபாசில் நடித்த ‘ஆவேஷம்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் இயக்கி வரும் ‘பாலன்’ படத்தில் ரைட்டராக பணியாற்றியுள்ளார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து சூர்யாவை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாவார். ஹிட் கொடுத்த இயக்குநருடன் சூர்யா கூட்டணி வைத்துள்ளதாக தெரியும் பட்சத்தில் இப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.