Advertisment

பழனி முருகன் கோயிலில் ‘சூர்யா 46’ டீம்

suriya 46 team in palani murugan temple

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறனுடன் அவர் கூட்டணி வைத்த வாடிவாசல் பட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படத்திற்கு முன் வேறொரு படத்தில் நடிக்கவுள்ளதாக சூர்யா அறிவித்தார். இப்படம் சூர்யாவின் 46வது படமாக உருவாகிறது.

Advertisment

சூர்யா 46வது படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரிக்கிறார். இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகவுள்ளது. படத்தின் பூஜை கடந்த மாத இடையில் நடைபெற்றது. அப்போது படத்தின் படப்பிடிப்பு கடந்த மே இறுதியில் தொடங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

Advertisment

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் பழனி முருகன் கோயிலில் சூர்யா, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மூவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது, படத்திற்கான திரைக்கதை அடங்கிய ஸ்கிரிப்ட்டையும் வைத்து வழிபாடு செய்துள்ளனர். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட், விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

palani murugan temple venky atluri actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe