The Suriya 44 team is waiting to treat the fans!

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா தனது 44வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை, சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதையடுத்து இப்படத்தில் பூஜா ஹெக்டே சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கின்றார். மேலும், இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், சுஜித் ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில், வருகிற 23ஆம் தேதி சூர்யாவின் 49வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாக சூர்யாவின் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து காத்திருக்கிறது. அதில், சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.