‘சூர்யா 42’ - டைட்டில், டீசர் அப்டேட் வெளியீடு

suriya 42 title teaser update

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ’சூர்யா 42’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவள்ளூரில் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 16ஆம் தேதி (16.04.2023) அன்று காலை 9.05 மணிக்கு டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகவுள்ளது. இதனை தயாரிப்புநிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

actor suriya siruthai siva Suriya 42
இதையும் படியுங்கள்
Subscribe