Advertisment

போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்த சூரி

Suri go rameshwaram with police protection

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விருமன் சூரியின் காமெடி ரசிகர்களால்பெரிதும் ரசிக்கும்படி வைத்துள்ளது.

ad

இதனிடையே விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி 1000 கோவில்கள்கட்டுவதை விட ஒரு ஏழைக்கு கல்விகொடுப்பது மிகவும் சிறந்தது என்று கூறியிருந்தார். சூரியின் இந்த பேச்சு பலரால் விமர்சிக்கப்பட்டதோடு, சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளது.அதன் பிறகு இது குறித்து விளக்கமளித்த சூரி, தனது பேச்சுக்கு மன்னிப்புதெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் சூரி சுதந்திர தினத்தன்று தனது இல்லத்தில் மாப் குச்சியில் கொடி ஏற்றியிருந்தாகக் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதுவும் பேசு பொருளாக மாறியது.

Advertisment

இந்நிலையில் நடிகர் சூரி ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். சமீபகாலமாக சூரியின்கருத்துக்கள் சர்ச்சையானதால்போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

actor soori Rameswaram
இதையும் படியுங்கள்
Subscribe