Advertisment

விரைந்து குணமடையும் டி. ராஜேந்தர்; வெளியான புகைப்படம்

Surgery successfully completed t Rajendar usa

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சேனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் டி. ராஜேந்தருக்கு வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனால் மருத்துவர்களின் அறிவுரையின் படி சிகிச்சைக்காகக் கடந்த 14 ஆம் தேதி குடும்பத்துடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் டி.ராஜேந்தர்.

Advertisment

இந்நிலையில் டி. ராஜேந்தர் வயிற்றில் இருந்த ரத்தக் கசிவு பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

actor simbu T Rajendar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe