பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான 'சாஹோ', 'ராதே ஷ்யாம்' படங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
பிரபாஸ் நடிப்பில் உருவான 'சாஹோ' படத்தின் படப்பிடிப்பின் போது பிரபாஸுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.அதனை அறுவைச் சிகிச்சை செய்து சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பிரபாஸ் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போனது. தற்போது பிரபாஸ் தன் அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிகிச்சையை முடித்து விட்டு மூன்று மாதங்களுக்கு பிறகுதான் இந்தியா வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபாஸ் நடித்து வரும் 'ஆதிபுருஷ்', 'சலார்', 'ப்ராஜக்ட் கே' ஆகிய படங்களின் பணிகளை அறுவைச் சிகிச்சைக்கு பிறகு தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.