ADVERTISEMENT

“வலிமையா இருக்கு... வாழ்த்துகள் அண்ணாத்த...” ஹர்பஜனுக்கு தமிழில் வாழ்த்து கூறிய ரெய்னா!

12:55 PM Sep 16, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃப்ரெண்ட்ஷிப்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து, இந்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாகப் படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது இயல்புநிலை திரும்பி, திரையரங்குகள் திறக்கப்பட்டதையடுத்து, 'ஃப்ரெண்ட்ஷிப்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், 'ஃப்ரெண்ட்ஷிப்' திரைப்பட வெளியீட்டிற்காக ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தமிழில் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "பஜ்ஜி பா... என் அண்ணாத்த! 'ஃப்ரெண்ட்ஷிப்' ட்ரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு. படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது. 'ஃப்ரெண்ட்ஷிப்' டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரெய்னாவின் தமிழ் ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT