suresh raina tweet about vikram in cobra movie

Advertisment

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 'கோப்ரா' படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கோப்ரா பட ட்ரைலரை பகிர்ந்து, "இர்ஃபான் பதான் பிரதர் உங்கள் நடிப்பை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள். படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.