suresh raina shared a suriya kanguva poster

Advertisment

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு தற்போது புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது. பாலிவுட், டோலிவுட், மோலிவுட் என தொடரும் நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் சூர்யா அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கங்குவா பட போஸ்டரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சூர்யாவை டேக் செய்துள்ளார். சுரேஷ் ரெய்னா கங்குவா படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக தெரிகிறது. சூர்யாவுன் சுரேஷ் ரெய்னாவும் கடந்த மார்ச்சில் மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.